பக்கம்:எழில் உதயம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 எழில் உதயம்

என்று ஒரு திருக்குறட்பாவில் சொல்கிருர். அதற்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, தன் பால் வந்து இரந்தோர் அப்பால் வேறு ஒருவரிடம் சென்று யான் இல்லாதவன் என்று கூருத வகையில் நிறைவான பொருளை வழங்க வேண்டும்’ என்பது. இதே கருத்தை வேறு ஒரு பழம்பாட்டுச் சொல்கிறது. சோழனிடம் சென்று இரந்து பொருள் பெற்ற புலவர்கள் மீட்டும் பொருளுக்காக வேறு யாரிடமும் சென்று கையேந்த வேண்டிய அவசியம் இல்லா மல் போகும் என்ற பொருளுடையது அது.

'செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம்

பெருமான் முகம்பார்த்த பின்னர்-ஒருநாளும் பூத லத்தார் தம்மைப் பொருள்நசையாற்

பாராவாம் காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்'

என்பது அந்தப் பாட்டு.

உலகியலுக்கு உதவியாகும் பொருளைத் தரும் வள்ளல் சுளே இவ்வாறு செய்வார்கள் என்ருல், என்றும் மாருத முத்தி இன்ப வாழ்வைத் தரும் எம்பெருமாட்டியின் வள்ளன்மை சொல்லும் தரமோ? அந்தப் பெருமாட்டியின் திருவடியைப் பணிந்த பிறகு பணிந்தவர்க்கு எல்லாக் குறையும் நிரம்பும் குறைவிலா நிறைவாகிய அன்னையின் திருவருள் சார்ந்தாரையும் குறைவிலா நிறைவுடைய வராகச் செய்யும், ஆதலின், உன்னுடைய பாத பத்மத் தைப் பணிந்த பிறகு வேறு ஒருவரை நான் பணியேன்” என்று சொல்லி முடிக்கிருர் ஆசிரியர், -

பணியேன் ஒருவரை, கின் பத்மபாதம்

பணிந்தபின்னே.

மணி முதலிய அரிய பொருளாகவும் அமரர்களுக்குப் பெரு விருந்தாகவும் நின்று அருள் செய்யும் அபிராமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/230&oldid=546385" இலிருந்து மீள்விக்கப்பட்டது