பக்கம்:எழில் உதயம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் புகழ் 223

தன்னுடைய திருவடி மலரைப் பணிந்தவர்களுக்கு ஒன்ருலும் குறை வைக்காமல் நிரப்பிவிடுவாள். ஆதலின் அவள் திருவடியைப் பற்றினவர்கள் வேறு புகலைத் கிதடும் அவசியமும், மன இயல்பும் இல்லாதவர்கள் ஆகிருர்கள்.

மணியே, மணியின் ஒளியே,

ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழ

கே, அணு காதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே,

அமரர் பெருவிருந்தே, பணியேன் ஒருவரை கின்பத்ம

பாதம் பணிந்தபின்னே.

(மாணிக்கத்தைப் போன்றவளே, மணியில் கலந்த ஒளி போன்றவளே, பிரகாசிக்கும் மணிகளால் புனையப் பெற்ற ஆபரணம் போன்றவளே, அணியும் அணிகளுக்கு அழகாக விளங்குபவளே, உன்னை அணுகிப் பணியாதவர்களுக்குப் பிணி போன்றவளே, பிறவி என்னும் நோய்க்கு மருந்தாக இலங்குபவளே, அமரர்களுக்குப் பெருவிருந்தாக இருந்து வாழ்வு தருபவளே, நின்னுடைய தாமரையைப் போன்ற திருவடியைப் பணிந்த பிறகு வேறு ஒருவரையும் வணங்க மாட்டேன்.)

இது அபிராமி அந்தாதியில் உள்ள 24-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/231&oldid=546386" இலிருந்து மீள்விக்கப்பட்டது