பக்கம்:எழில் உதயம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 எழில் உதயம்

இப்படியே சத்சங்கத்தில் பயில்கிறவர்களுக்கு உரையில் நல்ல பழக்கம் ஏறும். நான், நான் என்று சொல்லிக் கொண் டிருப்பவன் அடியேன் என்று சொல்லப் பழகிக்கொள்வான். எவரையும் நீ என்று சொல்லுகிறவன் நீங்கள் என்று மரியாதையாகப் பேசத் தெரிந்து கொள்வான். எந்தப் பேச்சிலும் இறைவனுடைய திருவருள் நினைப்பையும் கலந்து பேசுவான். பெரியவர்களோடு சேருவதற்குமுன், "இந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிடுகிருயா?” என்று கேட்டால், "ஓ! அற்புதமாகச் செய்து முடித்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்” என்று சொல்லி மார்தட்டுவான். நல்லோர்களுடைய கூட்டுறவு வந்த பின்போ, 'இறைவன் திருவருளைத் துணைக் கொண்டு செய்ய முயல்வேன்” என்பான். செருக்கும் தருக்கும் மாறி அடக்கமும் பணிவும் உண்டாகும்.

மனத்தில் தோன்றும் விருப்பு வெறுப்புகளும் இவ்வாறே மாறுதல் அடையும். நல்லவற்றிலே நாட்டமும் பொல்லா தவற்றிலே அருவருப்பும் உண்டாகும். காரண காரியத்தை எண்ணுமலே இந்தப் பழக்கம் உண்டாகும்.

இப்படி மன மொழி மெய்களாகிய மூன்று கரணங் களாலும் இயற்றும் செயல்களில் நல்ல பண்பு வளரும். எத்தனைக்கு எத்தனை அடியார் திருக்கூட்டத்தில் நெருங்கி நெடுங்காலம் பழகுகிருேமோ, அத்தனைக்கு அத்தனை நாமும் அவர்களைப்போல் ஆகிவிடுவோம். மனத்தை அடக்கி இறைவன்பால் செலுத்தும் பயிற்சி, தனியாக ஆராய்ந்து பார்த்து, நூல்களைப் படித்தால் மட்டும் வருவதில்லை, அடியார் கூட்டத்தைச் சேர்ந்து பழகுவதல்ைதான் வரும். இந்த உண்மையை அபிராமிபட்டர் சொல்கிருர்.

"நான் அடியார்களைப் பணிந்து அவர்களைப் பின் பற்றினேன். அதனல் பிறப்பறுக்கும் வழியைத் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/234&oldid=546389" இலிருந்து மீள்விக்கப்பட்டது