பக்கம்:எழில் உதயம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு 227

கொண்டேன்’ என்ருர். ஆனால் அடியார்களைப் பணிந்து அவர்களோடு உறவுகொள்ளும் நிலை கூட மிக எளிது என்று சொல்ல இயலாது. பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தினுல்தான் சத்சங்கம் நமக்குக் கிடைக்கும்,

'தவமும் தவமுடையார்க்கு ஆகும்' என்பது வள்ளுவர் வாய்மொழி. முன்னைத் தவம் இருந் தால்தான் இப்பிறப்பில் நல்லோர்களுடன் கூடும் வாய்ப்புக் கிடைக்கும். உலகத்தில் நல்லவர்களும் இருக்கிரு.ர்கள்; கெட்டவர்களும் இருக்கிருர்கள். நாம் யாருடனும் சேர்ந்துகொள்ளலாம். எல்லோரும் நல்லவர் களுடன் சேர்ந்துகொள்ள முயன்ருல் அதைத் தடுப்பார் இல்லை. ஆனால் அப்படி நடக்கிறதா? நல்லவர்கள் உலகத்தில் குறைவாகத்தான் இருக்கிருர்கள். அவர்களை நாடிச் செல்பவர்களும் குறைவாகவே இருக்கிருர்கள். முன்பு தவம் செய்தவர்கள் குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

திருவள்ளுவர் ஒரு கருத்தைச் சொல்கிரு.ர். தவத்தின் சிறப்பைப் புலப்படுத்துவதற்காக அதைச் சொல்கிரு.ர். முற்பிறவியில் நல்ல செயல்களைச் செய்து புண்ணியத்தை ஈட்டினவர்கள் இந்தப் பிறவியில் பொருளையும் போகத் தையும் பெறுவார்கள். அல்லாதவர்கள் வறுமையில் ஆழ்ந்து துன்புறுவார்கள். உலகத்தில் வறியவர்களே மிகுதியாக இருக்கிரு.ர்கள். அதற்குக் காரணம் என்ன? திருவள்ளுவர் சொல்கிரு.ர்.

'இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோவா தவர்.” . . 'உலகத்தில் பொருள் இல்லாதவர் பலராக இருப் பதற்குக் காரணம், நோன்பு நோற்பவர்கள் சிலர். தவம் செய்யாதவர்களே பலர்' என்று அவர் சொல்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/235&oldid=546390" இலிருந்து மீள்விக்கப்பட்டது