பக்கம்:எழில் உதயம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 எழில் உதயம்

உயிர்த்தன்மையையும், நிறைவையும், நேர்மையையும், அழகையும், சேர்த்தியால் உண்டாகும் சோபையையும் குறிக்கும் நிறம். அம்பிகை உயிருக்குயிராக, பரிபூரணப் பொருளாக, நேர்மையே உருவாக, அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவளாக, நல்லவற்றைச் சேர்த்து அருள் வழங்கு பவளாக விளங்குகிருள். அவளுடைய திருமேனிக்கு எதை உவமை சொல்வது?

நமக்குத் தெரிந்த சோதிப் பொருள்கள் மூன்று; அக்கினி, சந்திரன், சூரியன் என்பன அவை. அவற்றில் சிறந்தது சூரியன், அதனை உவமை கூறலாம் என்று தோன்றியது. ஆனல் சூரியன் பார்க்கக் கூசும் உருவ முடையவன் அல்லவா? அம்பிகையோ தன்னை உபாசிப்ப வர்களின் அகக்கண்ணில் கூசுதலைப் போக்கும் எழிலுடன் காட்சி தருபவளாயிற்றே! கதிரவன் உதயமாகும் பொழுது எல்லோரும் காணும்படி இருப்பான். ஒளியும் எழிலும் பொருந்திய உதய சூரியனை உவமையாகச் சொல்லலாம், லலிதா சக சிரகாமத்திலும் அந்த உவமை உண்டு. 'உத்யத்பானு ஸஹஸ்ராபா' என்று வருகிற தல்லவா?

இந்த எண்ணங்களின் முதிர்வாக அபிராமி அந்தாதி யின் முதல் தொடர் உதயமாகிவிட்டது. -

உதிக்கின்ற செங்கதிர்.

米 - 米

உதய சூரியன் உலகின் இருளே ஒட்டுவதுபோல அம்பிகை அஞ்ஞான இருளே ஒட்டுகிருள். சூரியன் உதயமானவுடன் நடுக்கத்தைத் தரும் பனி அகன்று போகிறது; அம்பிகையின் காட்சியில்ை நடுக்கத்தைத் தரும் தாபத்திரயங்கள் ஒழிகின்றன. தாமரைகள் செங் கதிரவன் உதயமாகும்போது விரிகின்றன; அம்பிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/24&oldid=546181" இலிருந்து மீள்விக்கப்பட்டது