பக்கம்:எழில் உதயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. எழில் உதயம்

உச்சித் திலகம்.

திலகம் பொருத்தந்தான். ஆனல் அது வைத்துக் கொண் டால் சில நேரத்தில் அழிவதாயிற்றே. எட்டாத செம்மை உதய சூரியன் என்று சொன்னல், இது கரைந்து போகும் செம்மையாயிற்றே! கிடைக்கும் பொருளாய், அணியும் போருளாய், மதிக்கும் பொரு ளாய், செவ்வண்ணப் பொருளாய் இருப்பது ஏதேனும் உண்டாஞல், அதைச் சொல்லலாம்.

அப்படி ஒரு பொருள் இருக்கிறதே ! மாணிக்கம் என்னும் செம்மணி பெரியவர்களால் மதிக்கத்தக்க செம்பொருள் அல்லவா? ஞானிகள் மதிக்கும் எம்பிராட் டிக்கு மணி நூலில் அறிவுடையவர்கள் மதித்துப் பாரட்டும் மாணிக்கத்தை உவமையாகச் சொல்வது பொருத்தமாக இருக்கும். பழம் புலவர்கள் அவளை, "மாணிக்க வல்லி' என்று பாரட்டியிருக்கிரு.ர்கள். ஆகவே மாணிக்கத்தை உவமை சொல்வதே பொருத்தம்.

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்.

  • · 宋 ::

இப்போது வேறு ஒர் யோசனை வந்து குறுக்கிடு கிறதே. மாணிக்கம் கைக்கு எட்டுவது; ஒளியுடையது; கரையாதது. எல்லாம் சரி. ஆனல் அது கடினமான தல்லவா? அம்பிகை வன்மை உடையவள் அல்லவே! அவள் மென்மையே உள்ளமாகவும் உருவமாகவும் படைத்தவள். கோமலாங்கி என்ற அவள் பெயர் மென்மையைக் குறிப்பதல்லவா? மென்மையாகவும், கைக்கு எட்டுவதாகவும், உயர்வான பொருளாகவும், செவ்வண்ணம் உடையதாகவும் ஒன்று. கிடைத்தால் அதைச் சொல்லலாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/26&oldid=546183" இலிருந்து மீள்விக்கப்பட்டது