பக்கம்:எழில் உதயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் உதயம் 19

மாதுளம்பூ இப்போது நினைவுக்கு வருகிறது. அது குளிர்ச்சியும் செம்மையும் மென்மையும் கொண்ட தல்லவா? அம்பிகையின் மென்மைக்கும் வண்ணத்துக்கும் ஏற்ற உவமைதான். "தாடிமீ குஸுமப்ரபா' என்று லலிதா சகசிரநாமமே சொல்லுகிறதே!

மாதுளம் போது என்பதே பொருத்தம்.

朱 ※

உவமைகளுக்கு அப்பால் நிற்கும் பெருமாட்டி பூர் மகா திரிபுரசுந்தரி, உதயசூரியனும், உச்சித் திலகமும், மாணிக்கமும், மாதுளம் போதும் அவள் திருமேனி லாவண்யத்திற்கு ஏதோ ஒரு சிறிய அளவில்தான் ஒப்பாக நிற்பவை. அவற்றை உவமை சொல்லி, 'அம்பிகைக்கு ஏற்ற உவமையைச் சொல்லிவிட்டோம்' என்று திருப்தி அடைந்துவிட முடிகிறதா?

அம்பிகையின் உபாசகர்கள் கோடாது கோடி பேர்கள். சிவபிரான் முதலிய தேவர்களும் பிறரும் அவ ளுக்கு அடியவர்கள். எப்போதும் அவள் அருகிலிருந்து திருமகளும் மலைமகளும் சாமரை வீசிக்கொண்டிருக் கிருர்கள். அப்படி இருந்தும் அவர்கள் அப்பிராட்டியின் திருமேனிப் பேரழகு முற்றும் கண்டு மனநிறைவடைந் தார்களா ? அதுதான் இல்லை. .

மனம் அமைதியாக இருந்தபோது, அகந்தை யொழிந்து நின்றபோது, திருமகள் திரிபுரசுந்தரியைக் கண்கொண்டு பார்த்தாள். மின்னல் மின்னியதுபோல் அப்பெருமாட்டியின் சோதித் திருமேனி தோன்றியது. ஒரு கணந்தான் அதைக் கண்டாள். பிறகு காணமுடிய வில்லை. மின்னல் ஒருகணந்தானே தோற்றும் மின்னல் அடித்தாற்போல ஒரு கணம் தன் உருவத்தைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/27&oldid=546184" இலிருந்து மீள்விக்கப்பட்டது