பக்கம்:எழில் உதயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் உதயம் 21

மென்மையான மணமுள்ள குங்குமப்பூக் கரைத்த குழம்பு நீரைச் சொல்வி நிறைவு பெறலாம் என்று,

மென்கடிக் குங்கும தோயம்

என்று பாடினர்.

அப்படியும் திருப்தி உண்டாகவில்லை. இவ்வளவும் தனித்தனியே ஒவ்வொரு சிறப்பினல் அம்பிகையின் வண்ண மேனிக்கு உவமையாகின்றன. எல்லாவற்றை யுமே சொல்லி விடலாம் என்று தோன்றுகிறது. பெரிய வர்கள் இந்தப் பொருள்களை உபமானமாகச் சொல்லியிருக் கிருர்கள். ஆதலால் இத்தனையையும் சொல்லி ஒரு வாறு அம்பிகையின் சமுதாய சோபையைத் தியானிக்க வழிகோலலாம் என்று எண்ணி, மேலே சொன்ன எல்லா உவமைகளேயும் தொகுத்து வைத்தார்.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்,

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது,

மலர்க்கமலை - . துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும

தோயம் என்ன . . விதிக்கின்ற மேனி அபிராமி என்றன்

விழுத்துணையே. . ஒன்றை மூன்று முறை சொல்வதல்ை உறுதி உண் டாகும். இங்கே ஒட்டிக்கு இரட்டியாக அம்பிகையின் திருமேனிக்குரிய உவமைகள் ஆறைச் சொல்லியிருக் கிருர் ஆசிரியர். அப்பிகையைப் பூஜித்துத் தம் கையாலே அபிஷேகம் செய்கிறவர்களுக்குத்தான் கடைசி உவமை யின் அருமை தெரியும். அந்த அருமையான பொருளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/29&oldid=546186" இலிருந்து மீள்விக்கப்பட்டது