பக்கம்:எழில் உதயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் உதயம் 23

செவேலென்ற வண்ணத்தோடு முருகன் எழுந் தருளுவதைப் பார்த்தால், கடலின்மேல் உதயசூரியன் தோன்றுவதைப்போல இருக்கிறதாம்.

'உலகம் உவப்ப, வலன்ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண் விளங்கு அவிர்ஒளி' என்று தொடங்குகிரு.ர். திரு முருகாற்றுப்படையின் தொடக்கத்தில் இளம் செஞ்ஞாயிற்றைக் காண்பது போலவே அபிராமி அந்தாதியின் ஆரம்பத்திலும், "உதிக்கின்ற செங்கதி'ரைக் காணுகிருேம்.

அம்பிகையின் திருமேனி செக்கச் சிவந்தது. அதனல் உதய ஞாயிற்றையும் உச்சித் திலகத்தையும் மாணிக்கத் தையும் மாதுளம் பூவையும் மின்னற் கொடியையும் குங்குமக் குழம்பையும் உவமையாகச் சொன்னர். அவளுடைய எழில் மேனியை உள்ளவாறே சொல்லிக் காட்ட முடியாது. அதனுல் உவமையினலே சொல்லப் புகுந்தார். -

பொதுவாகத் திருக்கோயில்களில் சிவபெருமானை வணங்கிவிட்டு அம்பிகையை வழிபடுகிருேம், அம்மை யின் தோத்திரங்களைப் பாடுகிருேம். அம்மையைப் பற்றி நாம் பல செய்திகளை அறிந்திருக்கிருேம், படங்களிலும் அம்மையின் திருவுருவத்தைப் பார்க்கிருேம். உமாதேவி, பார்வதி என்று போற்றும் அன்னே பச்சை வடிவினள் என்பதுதான் யாவருக்கும் தெரியும். ஆனல் இங்கே அபிராமிபட்டர் அம்மையைச் செவ்வண்ண மேனியின ளாகத் துதிக்கிரு.ர்.

இந்த வேறுபாடு-இந்த உண்மை-ழரீவித்தியா உபாசர்களுக்குத் தெரியும். சைவர்கள் பரமசிவம் என்றும், வைணவர்கள் பரவாசுதேவன் என்றும் கடவுளைப் பாராட்டி மற்றவர்கள் யாவரும் அவர்களிலும் தாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/31&oldid=546188" இலிருந்து மீள்விக்கப்பட்டது