பக்கம்:எழில் உதயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிபுர சுந்தரி 33

பதைச் சொல்ல வேண்டுமென்று விரும்புகிரு.ர். நாம் அவளே உணராவிட்டாலும் நம்மை அவள் உணர்ந்து அருள் செய்கிருள் என்பதைக் குறிப்பிக்க விரும்புகிருர்.

பெற்ற தாயும்

என்று பாட்டு வருகிறது.

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்.

※ 来 ::

தெய்வம் என்றும் தாய் என்றும் பெரியவர்கள் சொல்லுகிருர்கள். அதனால் நாமும் சொல்கிருேம். அந்தப் பெரியவர்களுக்கு ஆர் சொன்னர்கள்? அவர்கள் தம்முடைய அநுபவத்தால் உணர்ந்திருக்கலாம். ஆனல் திடீரென்று அவர்களுக்கு அநுபவம் வந்துவிடவில்லையே! முதலில் அம்பிகையை வழிபட்டுச் சாதனங்களில் ஈடு பட்ட பிறகே அநுபவம் சித்தித்திருக்கும். அவ்வாறு வழிபடுவதற்கு முன்பு அவளைத் தெய்வமென்று தெளிந்து தானே பக்தி செய்திருக்க வேண்டும்? அவர்களுக்கு அந்தத் தெளிவைத் தந்தவர் யார்? அவர்களுடைய ஆசாரியர்கள் என்று சொல்லலாம். அந்த ஆசாரியர் களுக்கு அறிவித்தவர்கள் யார் என்ற கேள்வி அடுத்தபடி எழும். இப்படிக் கேட்டுக்கொண்டே போனல் முடிவே இராது. முதல் முதலாக அவளைத் தெய்வமென்று தெளிந் தவர் எப்படித் தெரிந்து கொண்டார் என்று ஒரே கேள்வியாகக் கேட்டுவிடலாம். .

ஒன்று, இறைவியே தெரிவித்திருக்க வேண்டும்; அல்லது தன்னைப்போல அநாதியாக இருக்கும் ஒரு பிரதி நிதி வாயிலாகத் தெளிய வைத்திருக்க வேண்டும். ஆம்; அம்பிகை தன்னை அறியாதவர்கள் அறியும்படி செய்ய ஒரு பழைய விளக்கை வைத்திருக்கிருள். அதை அபெளருஷேயம் என்றும், அநாதியென்றும் சொல்வார்கள்

3- نة مياه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/41&oldid=546198" இலிருந்து மீள்விக்கப்பட்டது