பக்கம்:எழில் உதயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிபுர சுந்தரி 35

வேதத்தில் கர்மம், உபாசனை, ஞானம் என்று மூன்று பிரிவுகள் உண்டு. இம்மூன்றிலும் சிறந்தது ஞானபாகம். அது வேதத்தின் முடிவில் இருப்பது. அதுவே உபநிடதம். உபநிடதங்களை வேதசிரஸ் என்பர். ஞானமயமான அம்மை உபநிடதங்களே தன் வடிவாக இலங்குகிருள். ஆதலின் அவளை வேதத்தின் உச்சிப் பகுதி என்று சொல்ல லாம். மரத்தின் உச்சியில் இருப்பது கொழுந்து. ஆதலின் வேதமரத்தின் கொழுந்து அவள் என்று சொல்கிருர், -

சுருதிகளின் கொழுந்தும்.

உபநிடதங்களைக் கொழுந்து என்பதில் ஒரு நயம் இருக்கிறது. பழைய மரத்தில் உள்ள கொழுந்து புதுமை யைக் காட்டுவது. மரம் பழையது என்பதை அதன் வயிரமும், அதில் புதிய விளைவும் உண்டு என்பதை அதன் கொழுந்தும் காட்டும். பழமையும் புதுமையும் ஒருங்கே பொருந்திய மரத்தில் வயிரமும் கொழுந்தும் அவற்றிற்கு அடையாளம். அப்பர் சுவாமிகள் இறைவன் பழம் பொருளாகவும் புதுப் பொருளாகவும் இருக்கிருன் என்பதை,

'குருகாம் வயிரமாம்'

என்பதனால் புலப்படுத்துகிரு.ர்.

வேதத்தின் மற்றப் பகுதிகள் காலத்துக்கும் இடத் துக்கும் அதிகாரிகளுக்கும் ஏற்பப் பயன்படும். ஆளுல் வேத சிரசாகிய உபநிடதமோ யாவருக்கும் உரிய மெய்ஞ்ஞானத்தை உணர்த்தி என்றும் புதுமையாக விளங்குவது. ஆதலின் இளமையும் அழகும் உடைய கொழுந்தாக அதைச் சொன்னர். -

米 - 宗” #

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/43&oldid=546200" இலிருந்து மீள்விக்கப்பட்டது