பக்கம்:எழில் உதயம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிபுர சுந்தரி 37

வேதத்தின் அடி நடு முடியாகிய மூன்ருகவும் தேவி ஒளிர்கிருள். இதைச் சொல்ல வருகிறவர் அடி, நடு, முடி என்ருே முடி, நடு, அடி என்ருே சொல்லியிருக்கலாம். அவற்றில் ஒரு முறை இருக்கும். ஆனல் நடு, முடி, அடி என்பது போல, பனை, கொழுந்து, வேர் என்று சொன் ஞர். இதற்குக் காரணம் என்ன?

மரத்தை அணுகும்போது நமக்கு முதலில் கண்ணில் படுபவை அதன் கிளைகளே, நெடுந்துாரத்திலிருந்து பார்த் தாலே அடர்த்தியான தழைகளையுடைய கிளைகள் தெரி கின்றன. நெருங்கி வந்து அண்ணுந்து கவனித்துப் பார்த் தால் அதன் உச்சி தெரியும் பிறகு அதன் அடியில் அமர்ந்து தோண்டி ஆராய்ந்தால்தான் வேர் தெரியும், முதலில் தெரிவது கிளே; அப்பால் தெரிவது கொழுந்து; பிறகு முயன்ருல் தெரிந்து கொள்வது வேர். இந்த முறை பற்றி வைத்தார்.

வேதத்தின் திறத்திலும் இந்த முறையே பயனைத் தருவது. முதலில் அதன் சாகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும், பிறகு பயனைத் தரும் உபநிடதங்களே உணர வேண்டும். சிரவண மனன நிதித்தியாசங்களுக்குப் பிறகு திஷ்டையில் இருக்க வேதத்தின் வேராகிய பிரணவம் உதவுகிறது. இந்த வகையிலும் பாட்டில் உள்ள முறை பாருத்தமாக இருக்கிறதல்லவா?

துணையும் தொழும் தெய்வமும்

பெற்ற தாயும் சுருதிகளின்

பணையும் கொழுந்தும் பதிகொண்ட

வேரும், -

(பண-கிளை. பதிகொண்ட பதிதலைக்கொண்ட, •ጃሠዱ லே ஆழப் பதிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/45&oldid=546202" இலிருந்து மீள்விக்கப்பட்டது