பக்கம்:எழில் உதயம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 எழில் உதயம்

அபிராமி அந்தாதியில் பின்னே ஒரு பாடலில், “அகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு

முன்குய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்வி' என்று பட்டர் பாராட்டுகிருர், -

இவ்வாறு விளங்கும் அம்பிகையின் அடையாளங்களை அடுத்தபடி சொல்ல வருகிரு.ர்.

2

திருக்கோலம்

அம்பிகையின் சமுதாய சோபையை முதல் பாட்டில் சொன்ன அபிராமி பட்டர் இரண்டாவது பாட்டில் அந்தப் பெரும்ாட்டியின் திருவுருலத்தைக் கூர்ந்து: - நோக்கித் தியானம் பண்ணுவதற்குரிய அடையாளங்’ கனச் சொல்ல வருகிரு.ர். சுருதிகளின் பணயென்று, படர்ந்த கிளைகளே முதலில் சொன்னதுபோல், இரு புறமும் விளங்கும் திருக்கரங்களே முதலில் வருணிக் ÉGrf. -

... " - பனிமலர்ப்பூங்

கணையும் கருப்பஞ் சிலையும் மென் பாசாங்குசமூம் கையில் அணையும் திரிபு சுந்தரி. . -

அம்பிகையின் நான்கு திருக்கரங்களிலும் உள்ள பொருள்களைக் கூறுகிரு.ர். அழகே திருவுருவாக அமர்ந்த அன்னேயின் திருக்கரங்களில் அழகிய பொருள்கள் இருக்கின்றன. அவளுடைய வலக்கரங்கள் இரண்டில் மேல் சுரத்தில் ஐந்து மலரம்புகளையும் அதற்கு இணையான் மேல் இடக்கரத்தில் கரும்பாகிய வில்லையும். வைத்திருக்கிருள். பாசத்தைக் கீழ் இடக்கையிலும் அங்குசத்தைக் கீழ் வலக்கரத்திலும் வைத்துக்கொண்

டிருக்கிருள். இவை யாவும் படைக்கலங்களாக உதவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/46&oldid=546203" இலிருந்து மீள்விக்கப்பட்டது