பக்கம்:எழில் உதயம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 எழில் உ த்யம்

முல்லை, நீலோற்பலம் என்னும் ஐந்து மலர்களேயும் அம்பு களாகவும் வைத்துக்கொண்டு உலகைத் தன் வயப்படுத் தும் ஆற்றலுடையவன் காமன். அவன் திருமாவின் மகன். அவனுக்கு இந்தப் படைக்கலங்களே வழங்கியவள் அம்பிகையே. பாசமும் அங்குசமும் கணபதியின் திருக் கரத்தில் உள்ளவை. அப்பெருமான் சிவபிரானுடைய குழந்தை. அவனுக்கு அந்தப் படைக்கலங்களே வழங்கிய வள் திரிபுரசுந்தரியே.

உலகத்தைக் காமத்தின் வசப்படுத்தும் மாயா சொரூபியும், அதனினின்றும் நீக்கும் ஞானசொரூபியுமாக விளங்குகிறவள் அம்மை. முதல் வேலையைக் காமல்ை நிகழ்த்துகிருள்; அவனுக்குத் தன் படைக்கலங்களே உதவி அச்செயல் நிகழ அருள் பாலிக்கிருள். அப்படியே ஞானக் கொழுந்தாகிய கணபதியில்ை உலகம் ஞானம் பெறத் திருவருள் பாலிக்கிருள்; அப்பெருமானுக்குத் தன் பாசாங்குசங்களின் அம்சத்தை வழங்கியிருக்கிருள்.

வீரம் மிக்க ஒருவர் மற்ருெருவரை வென்ருல் தோல்வியுற்றவருடைய படைக்கலங்களை வென்றவர் கைக்கொள்வது வழக்கம். அம்பிகை காமத்தை வெல்லும் ஆற்றலைத் தன் அடியாருக்குத் தருகிறவள். காமனுடைய படைகளேத் தன் கையில் கொண்டிருப்பது இதனைப் புலப் படுத்துகிறது. அம்பிகையின் இந்தக் கரங்களைத் தியானிப் பவர்கள் காமத்தால் அல்லல் அடையமாட்டார்கள்.

- அகங்காரத்தை யானையாகச் சொல்வது வழக்கம். அதனைப் போக்குகிறவள் அம்பிகை. யானையை அடக்கும் பாசமும் அங்குசமும் அவள் திருக்கரத்தில் இருப்பதன் பொருள் இது என்று கொள்ளலாம். அகங்காரம் போக வேண்டுமானல் அம்பிகையைப் பாசாங்குசம் ஏந்தியவ வளாகத் தியானிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/48&oldid=546205" இலிருந்து மீள்விக்கப்பட்டது