பக்கம்:எழில் உதயம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகல் அடைந்தேன் 47

பொருந்தியிருக்கும் நிலையை மாற்றும் தீய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் நான் அகன்று வந்து விட்டேன்’ என்று சொல்கிரு.ர்.

நம்முடைய நாட்டில் ஞானிகளும் பக்தர்களும் இல் லாமல் போகவில்லை. அவர்களை நாம் சில சமயங்களில் சந்திக்கிருேம். கோயில் குளங்களுக்கும் குறைவில்லை. அவ்விடங்களுக்கு எப்போதேனும் போகிருேம். ஞான நூல்கள் பல பல உள்ளன. அவற்றை நமக்குச் செளகரியமாக இருக்கும் நேரத்தில் படிக்கிருேம்; சொல் லக் கேட்கிருேம். இவ்வளவும் நம்முடைய வாழ்நாளில் சில நாழிகைகளே நிகழ்கின்றன. மற்ற நேரங்களி லெல்லாம் காமம் குரோதம் முதலிய ஆறு குணங் களுக்கு அடிமையாகி அவற்றை வளர்க்கும் பொருள்க ளோடு செறிந்து நிற்கிருேம். அந்த வாசனை நம் உள்ளத்தில் படலம் படலமாகக் செறிந்திருக்கிறது. அதனல், தப்பித் தவறிக் கோயிலுக்குப் போளுல் அங்கும் அந்த வாசனை வந்து நலம் பெருமல் தடுக்கிறது. கடவுளின் திருவுருவத்தைத் தரிசித்து உருகவேண்டி 'யிருக்க, அங்கே வந்திருக்கும் மனிதர்களைப் பார்க்கிருேம்; அதிலிருந்து மனம் எங்கெங்கோ செல்கிறது. ஆகவே, நாம் இறைவன் அடியிலே என்றும் மாரு த அன்பை வைக்கப் பழகிக்கொள்ளவில்லை. பழகுவதற்குப் பிரபஞ்ச வாசனை நம்மை விடுவதில்லை.

நாம் பழகும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்மிடம் உலகியலைப்பற்றியே பேசுகிருர்கள். யாரேனும் நல்ல வர்களேக் கண்டு அவர்களோடு பழகப்போளுல், அந்தப் பேதையர் அவர்களை இகழ்கிருர்கள். அவர்களுடைய பெருமையை எண்ணுவதில்லை. நாம் நல்லவராவதற்கு எவ்வளவோ நாட்களாகலாம். அது அருமையான செயல். ஆனல் நல்லவர்களை நல்லவர்கள் என்று சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/55&oldid=546212" இலிருந்து மீள்விக்கப்பட்டது