பக்கம்:எழில் உதயம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகல் அடைந்தேன் 49

சுவீகாரமாக எடுத்துக்கொண்டவர்களைச் சாரும். அது போல், புண்ணிய பாவச் செயல்களின் பயன் அந்த ஞானியரைச் சார்ந்தவரை அடையும். யார் அவர்களே உபசரித்து வழிபடுகிருர்களோ அவர்களுக்கு அந்த ஞானி யர்கள் இயக்கத்திலே நிகழும் நற்செயல்களால் வரும் புண்ணியம் சாரும். தற்செயலாக நேரும் இங்குகளால் வரும் பாவம் அவர்கள் பெருமையை எண்ணுமல் இகழ் பவர்களைச் சாரும்; அதல்ை அவர்கள் நரகில் விழுவார் கள், நல்லவர்களுக்கு உறவாகாத அவர்கள் நரகுக்கு உறவாக இருப்பார்கள். அத்தகைய மனிதர்களின் தொடர்பு உடையவன் அதோகதி அடைவான்.

"நான் உன் திருவடியையே பற்றிக்கொண்டேன். உன்னுடைய அன்பர்களின் பெருமையை எண்ணி வழி ப-ாதவர்களும், தீவினை மிக்க நெஞ்சம் படைத்ததனல் குப்புற விழும் நரகத்துக்கு உறவானவர்களுமான துர்ச் சனர்களை நான் நெடுந்துாரத்தே விலகிப் பிரிந்துவிட் டேன்’ என்று பாடுகிருர் அபிராமிபட்டர்.

விளக்கை ஏற்றிக்கொண்டு வெளியிலே போகிறவன், அதை அணைக்கும் காற்றுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும். காற்று வீசாத இடமாகப் பார்த்து அதை வைக்கவேண்டும். அதுபோல அம்பிகையின் அன்பு தோற்றில்ை போதாது. அது தளர்ச்சி அடையும்படி யாகப் பேதையர்கள் செய்துவிடுவார்கள். அவர்களின் உறவை நாம் விட்டுவிட வேண்டும். "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்று இராமலிங்க சுவாமிகள் பாடுகிறர்.

தாம் அம்பிகையின் திருவடிபற்றி உய்த்ததையும் பொல்லாதவர்களைப் பிரித்து நின்றதையும் சொன்ன

எழில்.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/57&oldid=546214" இலிருந்து மீள்விக்கப்பட்டது