பக்கம்:எழில் உதயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தரி பாதம் 63

கொடிய நஞ்சு கழுத்திலே நின்றுவிட்டது, அதன் நீலநிற மிகுதியினல் சிவபிரானுடைய கழுத்து நீல நிறமாகியது; நீலகண்டன் என்னும் திருநாமத்துக்கு உரியவளுளுன் எம்பெருமான்,

அம்பிகை தன் திருக்கரத்தில்ை தடுத்து நிறுத்த, அவன் கரத்தின் பரிசத்தினுல் நஞ்சு அமுதம்போல ஒரு தீங்கும் செய்யாமல் அங்கே நின்றுவிட்டது. சர்வலோக ஜனனியாகிய அவளுக்கு இறைவன் திருவயிற்றிலுள்ள உயிர்கள் இறவாமல் இருக்கவேண்டுமே என்ற கருணை பிறந்ததனால் இவ்வாறு செய்தாள். அவளே தன் கையாள் தீண்டி அந்தக் கொடிய நஞ்சை அமுதாக்கிளுள். இதை இவ்வாசிரியர் சொல்கிரு.ர். -

வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை. இந்தக் கருத்தை மீட்ைசியம்மை குறத்திலும் காணலாம். -

“எவ்விடத்தும் தாமாகி இருந்தவருக் கருந்தவரும்

வெவ்விடத்தை அமுதாக்கும் விரைக்கொடியைப்

பாடுவனே’’ என்பது அதில் வரும் ஒரு கண்ணி. - அம்பிகையே திருமகளாக விளங்குகிருள். ஆதலின்

அவளே, பத்மாசன' என்று லலிதா சகசிரகாமம் கூறுகிறது. சகசிரார கமலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாட்டியும் அவள்தான். இவற்றையெல்லாம் எண்ணி, -

அம்புயமேல் திருந்திய சுந்தரி என்கிரு.ர்.

அன்னையின் பெயர்களுள் அந்தரி என்பது ஒன்று, அந்தரம். ஆகாசம். அவள் பராகாச வடிவுடையவள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/71&oldid=546228" இலிருந்து மீள்விக்கப்பட்டது