பக்கம்:எழில் உதயம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 எழில் உதயம்

மந்திரங்களைத் தக்க குருவின் முகமாக உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டும். அப்படி ஜபிக்கும்போது அந்த அந்த மந்திரத்திற்கு ஏற்ற தியான சுலோகத்தைச் சொல்லி, அப்பால் ஜபம் செய்யவேண்டும். அந்தத் தியான சுலோ கத்தில் மந்திரத்தின் தேவதையின் திருவுருவ வர்ணனை இருக்கும். அந்த உருவத்தை மனத்தில் இருத்தி மந்திரத் தை ஜபிக்க வேண்டும். இதற்காகவே ஒவ்வொரு மந்திரத் திற்கும் தனித்தனியே தியான சுலோகம் அமைந்திருக் கிறது. .

‘மந்திரம் என் மனத்தில் மன்னியது' என்று சொல்ல வந்தவர், வெறும் மந்திரம் மட்டும் அன்று; உன்னுடைய உருவத் தியானமும் உடன் செய்கிறேன்’ என்பதைக் குறிப் பாகப் புலப்படுத்துவதற்கு,

சிங்தையுள்ளே

மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!

என்று சேர்த்துச் சொன்னர்.

அம்பிகையின் திருவடியைத் தொழுது அவள் மந்திரத்தை ஜபித்து அவள் திருவுருவத்தைத் தியானித்து வாழ்வோருக்கு உலகியல் வந்து தாக்கும்போது சற்றே சலனம் உண்டாகலாம். உயர்ந்த இரத்தினத்தைப் பெற்ற வன் அதைப் பெட்டியில் வைத்துப் பூட்டுவதோடு வேறு வாரும் அந்தப் பெட்டியை எடுத்துச் செல்லாதபடி பல காவலர்களிடையே அதை வைத்துக் காவல் செய்வான். இங்கே அம்மையின் மந்திரமாகிய மாணிக்கத்தை மனம் என்னும் பெட்டியில் வைத்தவர், அந்தப் பெட்டி உலகி யல் வாசனையினல் களவு போகாதபடி அடியார்களினிடை யே இருந்து பாதுகாக்கிருர். அவர்கள் எப்போதும் அன்னையையே தியானம் செய்கிறவர்கள். அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/76&oldid=546233" இலிருந்து மீள்விக்கப்பட்டது