பக்கம்:எழில் உதயம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கரண வழிபாடு 69

கூட்டத்தினிடையே இருந்தால் நம்முடைய நல்ல பழக்கம் வலிமையை அடையும்; தீய பழக்கம் மறைந்து போகும். х

மனிதன் ஒரு கூட்டத்தினிடையே பழகினால் அவர் களுடைய பழக்கம் அவனை அறியாமலேயே அவனுக்கும் சார்ந்துவிடும்.

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்ருகும், மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு” என்பது திருக்குறள். ஆதலின் நல்லவர்கள் சத்சங் கத்தையே நாடுவார்கள். அருமையான பொருளைப் பெற்றவர்கள் அதனை மேலும் மேலும் வளர்ப்பதற்குப் பாங்கான கூட்டத்திலே சேர்வது முறை.

இங்கே, இவ்வாசிரியர் அன்னையைத் தியானிக்கும் அடியாருடன் கூடுகிருர். அவர்கள் எப்போதும் அம்பிகை யின் ஆகமங்களையும் அவற்றின் வழிவந்த நூல்களேயும் ஓதிக்கொண்டே இருக்கிரு.ர்கள். அவர்களோடு, கூடி எந்த முறையில் அவற்றைப் பாராயணம் செய்யவேண் டுமோ அந்த முறைப்படி ஆகமபத்ததிகளே இவ்வன்பரும் பாராயணம் செய்கிரு.ர். .

ஆகம வழி வந்த நூல்களைப் பத்ததி என்று சொல்வது வழக்கம்; சதாசார பத்ததி என்பது போன்ற நூல்கள் அத்தகையவை. r -, -

முன்னிய கின் அடியாருடன் கூடி முறைமுறையே பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே. ஆகமங்கள் சிவாகமம், வைஷ்ணவாகமம், சாக்தா கமம் என்று வெவ்வேறு பிரிவாக உள்ளன. ஆகமத் துக்குத் தந்திரம் என்பது ஒரு பெயர். பொதுவாக ஆகமம் என்ருல் சிவாகமங்களையும், - தந்திரம் என்ருல் சாக்தாமங்களையும் கொள்வது பெரு வழக்காகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/77&oldid=546234" இலிருந்து மீள்விக்கப்பட்டது