பக்கம்:எழில் உதயம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T4 எழில் உதயம்

காரணமாக இருக்கின்றன. ஆனல் அவை ஜடம். ஜடத் துக்குத் தானே இயங்கும் ஆற்றல் இல்லை. அந்த வினைகளைக் காரணமாகக் கொண்டு எம்பெருமாட்டியே உயிர்களுக்கு இன்பதுன்பங்களை ஊட்டுகிருள். மத்தைப் பானையிலிட்டுக் கடைகிற பெண்ணைப்போல் விளங்குகிருள், எம்பிராட்டி. குதித்துச் சுழன்று வரும் மத்துப்போல் உயிர் பிரபஞ்சத் தில் அநுபவங்களைப் பெறுகிறது.

தயிர் உடைந்து வெண்ணெய் திரண்டு மோரிலே

ஒட்டாமல் மிதக்கும் பக்குவம் வந்தால் பெண்மணி கடை வதை நிறுத்தி விடுகிருள். பிரபஞ்சத்தோடு ஒன்றி நின்ற அநுபவம் நீங்கி, ஒன்றியும் ஒன்ருத முக்த நிலையில் பெறும் அநுபவமாகிய நவநீதம் தோன்றி விட்டால் உயிரும் செயலொழிந்து நிற்கிறது.

இப்போது தயிர் கடையும் மத்தைப் போலச் சுழன்று சுழன்று தவிக்கிறது உயிர். 'என்னுடைய உயிர் தயிரில் நின்று சுழலும் மத்தைப்போலச் சுழலுகிறது; அதனல் தளர்ச்சி அடைகிறது. இந்தத் தளர்ச்சி இல்லாததாகிய கதியை அடையும் வண்ணம் நீ நின் திருவுள்ளத்தில் எண்ணியருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிருர் இந்தப் பேரன்பர். -

ததி உறு மத்திற் சுழலும் என்

ஆவி தளர்வு இலதோர் கதி உறு வண்ணம் கருதுகண்டாய்,

(ததி-தயிர். மத்தின்-மத்தைப்போல.)

求 - 冰河

தயிர் கடைகி JD பெருமாட்டி அம்பிகை. கைவளை குலுங்கத் திருமேனி அசையத் திருவிழி கயிற்ருேடு செல்ல அம்பிகை கடைகிருள். ஆம்! உயிர்க்கூட்டங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/82&oldid=546239" இலிருந்து மீள்விக்கப்பட்டது