பக்கம்:எழில் உதயம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயிரும் மத்தும் 77

அம்பிகையை இந்த மூன்று அதிகாரிகளும் வணங்கு கிருர்கள்; எப்போதும் அவளுடைய புகழைச் சொல்லித்

துதிக்கிருர்கள்.

"மதியுறு வேணி மகிழ்நன்கூட வணங்குகிருஞ?’’ என்று கேட்கத் தோன்றும். ஆம்; அவனும் வணங்கு வான், அரசுக்கு ஒரு தலைவன் இருந்தால் அவனை அரசன் என்போம். அவன் மனைவி அரசி. அரசுக்குத் தலைவி ஒருத்தி இருந்தால் அவளும் அரசிதான்; ஆனால் அந்த அரசியின் கணவன் அரசனுவதில்லை. இங்கிலாந்துக்கு அரசி எலிஸபெத், பிலிப்ஸ் கோமகன் அவளுடைய கணவனே யன்றி அரசனாக மாட்டான்.

அவ்வாறே மதியுறு வேணி மகிழ்நனுக இருந்தாலும், அவன் அதிகாரிகளிற் சிறந்தவனேயன்றி, அவனும் அரசியை வணங்கும் நிலையில் இருப்பவனே, “நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதனும் நாரணனும், அயனும் பரவும் அபிராமவல்லி” (74) என்று பின்னே ஒரு பாட்டில் தருகிறது.

அந்த மகிழ்நன் இரு வகையில் வணங்குவதுண்டு. மூன்று அதிகாரிகளுடன் ஒருவகை நின்று அரசியை வணங்கும் வணக்கம் இது. இதனையன்றி அம்பிகையோடு தனியே இருக்கும் போது ஊடற்காலத்து வணங்கும் வணக்கமும் உண்டு. அதைப்பற்றிச் சில இடங்களில் அபிராமிபட்டர் பாடுகிருர், அதைப் பிறகு பார்க்கப் போகிருேம்.

அபிராமியம்மை மூத்தேவரும் வணங்கும் செய்ய திருவடி உடையவள் என்பதை நினைவு கூர்கிருர் ஆசிரியர். . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/85&oldid=546242" இலிருந்து மீள்விக்கப்பட்டது