பக்கம்:எழில் உதயம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயிரும் மத்தும் 79

சொல்லுகிருர். அந்தச் செளந்தரிய ல்ஹரியிலே தம்மை மறக்கும் சங்கரர் பெருமை நாம் அறிந்தது தானே?

ததியுறும் மத்திற் சுழலும்என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்

டாய்; கம லாலயனும் மதியுறு வேணி மகிழ்கனும்

மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடி யாய்,சிந்து ரானன சுந்தரியே! (தயிரில் நின்று சுழலும் மத்தைப்போலப் பிறப்பு இறப்புக்களினிடையே சுழலும் என் உயிர், தளர்ச்சியில்லாத தாகிய ஒருநல்ல நிலையை அடையும் வண்ணம் திருவுள்ளத் தில் கொண்டருள வேண்டும்; தாமரையை இருக்கையாகக் கொண்ட பிரமனும், சந்திரனை வைத்த சடாபாரத்தை யுடைய நின் கனவளுகிய சிவனும், திருமாலும் வணங்கி எப்போதும் துதிசெய்கிற செம்மையான திருவடிகளை உடை யவளே, செவ்வண்ணத் திலகம் அணிந்த நெற்றியுள்ள பேரழகியே!

ததி-தயிர். ஆவி-உயிர். கதி-வழி; இங்கே நிலை. கருது கண்டாய்; கண்டாய், அசைநிலை. கமல ஆலயன்; ஆலயம்-இருப்பிடம். மதி-பிறை. வேணி-சடை. மகிழ்நன்-கணவன். சிந்துர ஆண்ணம்; சிந்துரம்-குங்குமத் திலகம்; ஆனனம்-முகம்; இங்கே நெற்றி.! -

பிறப்பு இறப்பாகிய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்பது கருத்து, - -

மாணிக்கவாசகர் ஒரு வகையில் மத்தையும் தயிரையும் உவமையாக ஆண்டிருக்கிருர்; மத்துறு தண்டபிரிற்புலன் தீக்கது வக்கலங்கி, வித்துறு வேனை விடுதி கண்டாய்” என்பது அவர் திருவாக்கு, .

இது ஏழாம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/87&oldid=546244" இலிருந்து மீள்விக்கப்பட்டது