பக்கம்:எழில் உதயம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் உதயம்

உலகம் முழுவதும் எழில் மயம். இறைவன் படைத்த படைப்பு அத்த%னயும் அழகுப் பிழம்பு, மனிதன் செயற் கையினுல் அழகை அழுக்கு ஆக்குகிருன். இயற்கையில் எல்லாமே அழகுதான். குழந்தை அழகாகப் பிறந்து அழுக்காக மடிகிறது. தளிர் அழகாகத் தோன்றி அழுக்கேறிச் சருகாகி உதிர்கிறது.

இந்த அழகைத் தோற்றுவிக்கும் இணையில்லாச் சக்தி இறைவியாகிய ராஜராஜேசுவரி, அவள் பேரழகி. அவள் தூய அழகிலே சொக்கிப் போன அன்பர் பலர். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத அவளை அபிராமி என்று வழங்குவர். அவளுடைய பேரருளிலே ஈடுபட்டவர் அபிராமிபட்டர். அவர் அபிராமியை அழகிய நூறு பாடல்களால் பாடி யிருக்கிரு.ர். அன்னையின் அழகையும் அருளையும் ஆற்றலை யும் திருவிளையாடல்களையும் வீரச்செயல்களையும் திருநாமங் களையும் எண்ணி எண்ணி இன்புற்று, நம்மையும் எண்ணி எண்ணி வழிபாடு பண்ணி நலம்பெறச் செய்கிருர், எழில் உதயமானல் அதனைக் கண்டு இதய மலர் மலரும் அல்லவா?

அபிராமியின் பேரெழில் உதயமாக, அதை அகத்தும் புறத்தும் கண்டு காட்டினவர் அபிராமிபட்டர். அவர் தந்த எழில் தமிழ்க் கவிதை அபிராமி அந்தாதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/9&oldid=546166" இலிருந்து மீள்விக்கப்பட்டது