பக்கம்:எழில் உதயம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 எழில் உதயம்

|அழகி, எம் தந்தையாகிய சிவபிரானுக்குரிய வாழ்க் கைத் துணைவி, என் பாசமாகிய விலங்கையெல்லாம் என். பால் கருணையினுல் எழுந்தருளி வந்து அழிக்கும் சிந்துரம் போன்ற செவ்வண்ண மேனி உடையவள், மகிடாசுரன் தலையின்மேல் நிற்கும் அந்தரி, நீல நிறம் உடையவள், என்றும் அழிவற்ற கன்னிகை, வேதஞகிய பிரமனுடைய கபாலத்தைத் தாங்கிய திருக்கரத்தை உடையள் ஆகிய அபிராமியின் தாமரை மலரைப் போன்ற திருவடிகள் என் கருத்தில் உள்ளன.

தொடர்-விலங்கு. அரி-அரிக்கும் அழிக்கும். ஆரணம்வேதம். கம்-தலை; இங்கே கபாலம். தரி. தாங்கும்.) . .

இறைவியைத் தியானம் செய்கிறேன் என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 8ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/94&oldid=546251" இலிருந்து மீள்விக்கப்பட்டது