பக்கம்:எழில் விருத்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 வாணிதாசன் 'விருத்தப்பா' என்பது தமிழ்மொழியின் பாவகைகளுள் காலத்தால் பிற்பட்டது. எனினும், அதனுடைய மூல வடிவத்தைச் சிலப்பதிகாரத்தின் வரிப்பாடல்களில் நாம் காண்கின்றோம். அது தேவார, திவ்வியப் பிரபந்தங்களில் வளர்ச்சியுற்றுக் கம்பனுடைய இராமாவதாரத்தில் முழுநிறை வடிவத்தைப் பெற்றிருக்கிறது. பண்டைத் தமிழின் யாப்பிலக்கணத்திலிருந்து கிளைத்துப் பின்னர் வடமொழி இலக்கண மரபைச் சார்ந்து செழித்து வளர்ந்த சிறப்புடையது விருத்தப்பா. கம்பனுக்குப் பிறகு தோன்றிய புலவர்கள் பெரும்பாலும் விருத்த யாப்பிலேயே தங்கள் அரும்பெரும் நூல்களை இயற்றியுள்ளனர். நால்வகைப் பாவிலும், அவற்றின் இனங்களிலும் பல்வேறு பாட்டுக்களை இயற்றிய நம் கவிஞர், உள்ளத்தைக் கவரும் விருத்தமெனும் ஒண்பாவில் பன்னிரண்டு தலைப்புக்களில் இயற்றிய நூற்றிருபது பாட்டுக்களின் தொகுப்பாக 'எழில் விருத்தம்' என்னும் இந்நூலை நமக்கு அளித்துள்ளார். இந்நூலின் பெயரும், அதில் பயன்படுத்தப் பட்டுள்ள யாப்பும் அவர் 'மரபுவழிக் கவிஞர்' என்பதைச் சொல்லாமற் சொல்லுகின்றன. இத்தொகுப்பிலுள்ள பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. எண்பத்தைந்து (கி.பி.1885) ஆண்டுகளுக்கு முன்பு திரு.தி. வீரபத்திர முதலியார் பி.ஏ., பி.எல்., அவர்களால் இயற்றப்பட்ட் 'விருத்தப்