பக்கம்:எழில் விருத்தம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 . . வாணிதாசன் உணர்வால் உந்தப்படுவேன். நினைத்துப் பார்க்கின் அந்நாட்களெல்லாம் பசுமையான நாட்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. 1942 ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரை புதுவையை அடுத்த இரெட்டியார் பாளையத்தில் ஆசிரியப்பணி புரிந்து கொண்டிருந்தேன். அப்பொழுது மதுரையிலிருந்து கோ.தா. சண்முக சுந்தரம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஆதித்தனாரால் நடத்தப்பட்ட 'தமிழன்' என்ற திங்களிதழ் வெளி வந்து கொண்டிருந்தது. அதில் பாரதியார் பிறந்த நாளுக்காக - 'பாரதி நாள் இன்றடா பாட்டிசைத்து ஆடடா" என்ற பாடலை "பாரதி நாள்” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அப்பாடலே நான் எழுதிய முதற் பாடலாகும். என் விருப்பப்படி பாடல் வெளிவந்தது. ஆசிரியரிடமிருந்து பரிசு ரூ.10-ம் பாராட்டுக் கடிதமும் வந்தன. என் புகைப்படமும் வாழ்க்கைக் குறிப்பும் கேட்டு எழுதியிருந்தார் ஆசிரியர். மறுவெளியீட்டில் என் புகைப் படமும் வாழ்க்கைக் குறிப்பும் வந்தது. அதோடு இவர் பாடல் எளிமையும் இனிமையும் மிகுந்தன; ஏதோ ஓர் இலட்சிய வெறியில் பாடுகிறார்; இவர்க்கு நல்ல எதிர் காலம் உள்ளது" என்ற தமிழன் ஆசிரியரின் பாராட்டுரையும் வந்தது. முதற் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு என்னை மேலும் தமிழனில் தொடர்ந்து பாட்டெழுதும் துணிவைத் தந்தது. ரங்கசாமி என்ற என் இயற் பெயரின் முதலெழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து 'ரமி' என்ற புனை பெயரில் தமிழனில் தொடர்ந்து பாட்டெழுதலானேன். தமிழன்' ஆசிரியருக்கு ரமி என்ற புனை பெயர் பிடிக்காமற் போய்