பக்கம்:எழில் விருத்தம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 10 'வாணிதாசன் என்ற புனைபெயரில் எழுதுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார். - பாரதிதாசன், வாணிதாசன் பல முறை இச்சொற்களைச் சொல்லிப் பார்த்தேன். ஆசிரியர் பெயர் பாரதிதாசன்; மாணவர் பெயர் வாணிதாசன்; பாரதியும் வாணியும் கலை மகளைக் குறிக்கும் சொற்கள் தாமே, வாணிதாசன் என்ற புனைபெயரை ஏற்றுக் கொண்டு 'தமிழன்' ஆசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றுவதென முடிவு செய்தேன். அன்று முதல் வாணிதாசன் என்ற பெயரே எனக்கு நிலைத்துவிட்டது. எனது பாடல்களைத் தமிழன்’ பத்திரிகைக்குப் பிறகு 'பொன்னி', 'காதல்", முதலான பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. திராவிட நாடு, முத்தாரம், முரசொலி, மன்றம், குயில் போன்ற பல ஏடுகளில் எழுதியுள்ளேன். நான் அதிகமாக எழுதியது புதுக்கோட்டை பொன்னி ஏட்டில் என்பதை என் வினால் மறக்க முடியாது. பாராட்டுக் கடிதங்கள், ஊக்கக் கடிதங்கள் பலரிடமிருந்து கிடைத்துக் கொண்டிருந்தன. நினைத்துப் பார்க்கின் அன்றைய மனப்போக்கு வேறு. அன்று கவிஞனைப் பாராட்டினார்கள், பரிசளித்தார்கள். இன்றோ கவிதை எழுதக் கேட்டு மலரை அழகுபடுத்தி விற்கின்றனர். கவிஞனைக் கடைக்கண்ணால் கூடப் பார்ப்பது கிடையாது. நான் புதுவைக்கு அண்மையில் பணிபுரிந்த காரணத்தால் கவியரசரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. சீர்திருத்த எண்ணங்கள் அவர் தொடர்பால் ஏற்பட்டுத் தழைத்தன. அவர் நடத்தி வைக்கின்ற தமிழ்த் திருமணங்கட்கெல்லாம் நானும் அழைத்துச் செல்லப்படுவேன். திருமணமானவன் என்ற காரணத்தால் நானும்