பக்கம்:எழில் விருத்தம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் | ()7 படைப்பும் பதிப்பும் நான் வித் துவான் தேர்வு எழுது முன்னரே பல தமிழ்க் கவிதைகளோடு பிரெஞ்சு மொழி இலக்கியங்களில் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்திருந்தேன். குறிப்பாக விக்டர் வியுகோவால் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஆன்ழெல்லோ என்ற நாடகம் ‘காதல் உள்ளம்' எனும் பெயரில் தமிழாக்கம் செய்யப்பெற்று 'கலை மன்றம் இதழில் முழுவதும் தொடர்ந்து வெளியிடப்பட்டது. அடுத்து மாப்பாசானின் சிறுகதையொன்றை, பெரிய இடத்துச் செய்தி' என்ற பெயரிலும் நெடுங்கதையொன்றை ‘வாழ்க்கை' என்ற பெயரிலும் மொழிபெயர்த்து ஏடுகளில் வெளியிட்டு வந்தேன். தொடர்ந்து சிறுகதை எழுதும் ஆசைகூட எனக்கு அப்போது எழுந்ததுண்டு. நினைத்துப் பார்க்கின் அந்தப் போக்கில் என்னை ஏனோ நான் மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றிக் கொண்டிருந்தால் வளமான வாழ்வை அடைந்திருக்கலாம். கதைக்கு இருக்கின்ற ஆர்வம் கவிதைக்கு இன்று நாட்டில் இல்லை. கலப்புத்திருமணம் செய்துகொண்டு சென்னையிலுள்ள மண்ணடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த என் உறவினர் பட்டாக்கத்தி இராமசாமி என்பவரில்லத்திலும் என் கெழுதகை நண்பர் ந.அறிவழகன் தங்கியிருந்த பாரி நிலையத்திலும் வித்துவான் தேர்வெழுதச் செல்லும் போதெல்லாம் தங்குவது வழக்கம். சென்னைத் தொடர்பால் பல அரிய நண்பர்கள் எனக்கின்றும் உள்ளனர். அதில் குறிப்பிடத் தக்கவர்கள் வித்துவான் ந.அறிவழகன், புலவர் தில்லை. தா.அழகுவேலனார், செந்நீர்க்குப்பம் ஆசிரியர் செங்கல் வராயன் முதலியோராவர். - ஆசிரியர் செங்கல் வராயனோடு மாமல்லபுரம் சென்றிருந்தேன். பல்லவர்கள் சிற்பக்கலைக் களஞ்சியமான