பக்கம்:எழில் விருத்தம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 வாணிதாசன் போதெல்லாம் பாரி நிலையத்தில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் பங்குதாரர் ந.பழனியப்பனோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பாரி நிலையத்திலிருந்து பங்குதாரர் ந.பழனியப்பன் பிரிந்து தன் சகலையோடு கூட்டுச் சேர்ந்து மலர் நிலையம் என்ற பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் 1954ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட 'எழிலோவியம்' என்ற நூலை மலர் நிலையம் வாயிலாக வெளியிட்டார். அந்நூலுக்குத் தமிழ்த் தென்றல் திரு.வி.க., சென்னைத் தமிழாசிரியர் மன்றத் தலைவர் தமிழ்த்தாத்தா மயிலை சிவமுத்து, பேராசிரியர் நாவலர் பசுமலை, சோமசுந்தர பாரதி, முத்தமிழ்க் காவல்ர் கி.ஆ.பெ. விசுவநாதன் முதலியோர் நல்ல பாராட்டுதலை வழங்கியிருந்தனர். எழிலோவியம் எனக்கு நல்ல புகழையும் பெயரையும் மக்களிடையே உண்டாக்கித் தந்தது. 1954ஆம் ஆண்டு மலர் நிலையம் என் கவிதைகளைத் தொகுத்து "வாணிதாசன் கவிதைகள்' என்ற நூலை வெளியிட்டது. பாரிநிலையம் ஏற்பட்டது போல மலர் நிலையம் பிரிந்து வள்ளுவர் பண்ணை ஆயிற்று. அப்பெயரில் ந.பழனியப்பன் நூல் வெளியீடு செய்து வந்தார். அவர் "தீர்த்த யாத்திரை', 'இன்ப இலக்கியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய மூன்று நூல்களையும் 1959 இல் வெளியிட்டுதவினர். அதன்பின் அவருக்கும் எனக்கும் சிறு தகராறு காரணமாகத் தொடர்பற்று விட்டது. நினைத்துப் பார்க்கின் அந்த நாட்களெல்லாம் என் புகழ் ஓங்கிக் கொண்டிருந்த நாட்களாகும். - -