பக்கம்:எழில் விருத்தம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் | | | திருச்சி அன்பக வெளியீட்டார் நான் பொங்கல் மலர்களுக்கு எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்களைத் திரட்டி 1959 ஆம் ஆண்டு 'பொங்கற் பரிசு” என்ற நூலை வெளியிட்டனர். - - - வள்ளுவர் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த தா.முரு கைய முதலியார் உறவினர் பலரோடு கூட்டுச் சேர்ந்து மனோன்மணி புத்தக நிலையத்தைச் சென்னையில் ஏற்படுத்தினார். அதிலிருந்து ‘'சிரித்த நுனா’, இரவு வரவில்லை', 'பாட்டுப் பிறக்கு மடா ஆகிய நூல்கள் 1963 ஆம் ஆண்டு வெளிவந்தன. . . . . . . . "இனிக்கும் பாட்டு", "எழில் விருத்தம்", "பாட்டரங்கப் பாடல்கள்" ஆகிய மூன்று நூல்களும் பாரி நிலையத்தின் வாயிலாக முறையே 1965, 1970, 1972 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன. தொடக்கத்திலிருந்தே பாரியின் புகழ்போல் பாரி நிலையம் சீரும் சிறப்பும் பெற்று வருகிறது. நினைத்துப் பார்க்கின் நான் சந்தித்த வெளியீட்டுரிமையாளர்களுள் பண்பும், நேர்மையும் எளிமையும் நனிமிகுந்தவர் பாரி செல்லப்பச் செட்டியார் அவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப் படுகின்றேன். - - நான் பல்வேறு கவியரங்குகளில் பங்கு கொண்டுள்ளேன். முப்பது கவியரங்குகளில் பாடிய பாடல்களின் தொகுப்பே 'பாட்டரங்கப் பாடல்கள்' என்னும் நூலாகும். நினைத்துப் பார்க்கின் என்னைப் பெரிதும் ஊக்கியதும் பலர் பாராட்டைப் பெற்றதுமான பல கவியரங்கப் பாடல்கள் இன்றும் என் மனதில் மகிழ்ச்சியை ஊட்டிக்கொண்டேயிருக்கின்றன. ': . . . .