பக்கம்:எழில் விருத்தம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வாணிதாசன் உட்கிடக்கையும் உணர்வும் 14.1.1952 இல் திருச்சி வானொலி நிலையத்தார் 'பொங்கல் விழா கவியரங்கிற்கு என்னை அழைத்திருந்தார்கள். கவியரங்கிற்கு மறைந்த சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். "வாழ்க இளம் பரிதி: என்ற தலைப்பில் நான் பாடினேன். ஆசை மனையாட்டி! அன்பே இதைக்கேள்நீ! மூசையிலே வைத்தெடுத்த பொன்னே முளித்தகதிர்நீர்நிலங்கள் விண்ணை நிலைத்த பொருளையெலாம் ஆட்டிப் படைப்பதுவும் ஆக்கம் விளைப்பதுவும் வானம் முளைத்து வரும்பரிதிச் செய்கையடி. இல்லம் புதுக்கி எழில்புதுக்கி நீராடி அல்லொத்த கூந்தல் அழகைப் பெருக்க நறுநெய் தடவுக நன்றாக வாரிமுடி புத்தாடை பூண்நீ மலர்ச்சூடு நம்விட்டுச் சொத்தாம் குழந்தைகளைத் தூய்மைப் படுத்துகவே! கூப்பிடு வாழ்வோர் அனைவரையும் கூப்பிடடி காப்பெதற்கு? கார்தந்த செல்வம் விளைபொருள்கள் சாப்பாட்டைத் தேக்காதே; சண்டை அதன்விளைவாம். பங்காக்கி உண்போம் பசியேது பின்னாட்டில்? - கொண்டுவா யாழைக் குழந்தைகளைப் பாடவிடு பண்டைத் தமிழ்வீரம் பாடட்டும் கேட்போம் அரசர் மடிமேல் அரும்புலவர் செந்நாவில் ஓங்கி வளர்ந்த உயர்தமிழைப் பாடட்டும் ஊனுயிரை மக்கள் உணர்வை வளர்த்துவரும் தேனாம் செந்தமிழைப் பாடட்டும் கேட்போம் உனது குரலினிமை உன்மக்கள் சொல்லில் கனிந்துளது ஆதலினால் கண்மணிகள் பாடட்டும்.