பக்கம்:எழில் விருத்தம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் | | 5 ஏக்கமே என்னுள் குடிகொண்டுள்ளது. சிறப்பாக எனதாசான் பாவேந்தர்; தமிழ்மக்கள்... ஆசான். அவர், வீழ்ச்சியுற்ற தமிழருக்கு வலிவூட்டும் குன்றம் மெல்லியரின் வாழ்விற்கு புரட்சிவழிப் பாட்டை சூழ்ச்சியினால் வளர்ந்தமதக் கோட்டைக்கு வேட்டு ஒருசிலரின் சொத்தாக இருந்ததமிழ் ஊற்றைத் தாழ்ச்சியின்றித் தமிழ்நாட்டு மக்களெலாம் உண்ண எளிமையொடு சுவையூட்டிச் சரிசெய்த வள்ளல் ஆழ்கடலில் முத்தொத்த அறிவுரையை நல்கும் எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான் சிரிக்கின்ற அழகெல்லாம் செஞ்சொல்லால் தீட்டிச் செந்தமிழின் நயம்விளங்கச் செய்திட்ட ஆசான் வரிப்புலியே இளந்தமிழா எனவிளித்து நாட்டில் வளர்கொடுமை அறியாமை வறுமையினைக் காட்டி ஒருநாளும் தயங்காதே தமிழ்வாளைத் தூக்கே ஒண்ட்மிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஏற்றம் குரைப்பாருக் கஞ்சாதே எனநாளும் சொல்லும் எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான் இன்றில்லையே என்பாட்டைக் கண்டு களித்து வாழ்த்த என்கின்ற துயரமே தலைதூக்கி நிற்பதை நான் உணர்கிறேன். குறிக்கோள் - - என் குறிக்கோளெல்லாம் அவரவர் தாய்மொழி சீரும் சிறப்புமாக வாழ வேண்டும். சமுதாயம் சீர்திருந்த வேண்டும். ஏழை பணக்காரன் இல்லாத பொதுவுடைமை நாட்டில் நிலைபெற வேண்டும் என்பதாகும். என் பாடலில் பல இடங்களில் இக்கருத்தே வலியுறுத்தப்பட்டிருக்கும்.