பக்கம்:எழில் விருத்தம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 | 6 வாணிதாசன் "ஓங்குக ஓங்குகவே - தமிழ் உலகோடே உயர்வாக நிலைபெற்று நீடுழி" "ஏங்கி மெலியும் ஏழை பாட்டாளி உழவர்கள் இன்னல்களைந் துவாழ்வை நன்னிலை யாக்கும் தமிழ்" "தாழ்வு உயர்வுஎனும் சாதியும் நீக்கி சஞ்சல மில்லாத வாழ்வைப் பொதுவாக்கி ஏழை எளியவர் இல்லாத தமிழ்நாட்டை இன்று சமைப்போம் வெட்டிவீழ்த்துவோம் தமிழ்க்கேட்டை" "உன்னை மறந்ததுநாளன் வாழ்வேனோ? - என் உயிருக்குயிர் ஆகிய செந்தமிழே. - அமுதே அன்னையை மறந்தாலும் அப்பனை மறந்தாலும் அன்பு மனைவிமக்கள் அணைப்பை மறந்தாலும்" “..... "இந்த நாட்டில் பழக்கத்தால் உயர்வு தாழ்வு படைப்பினால் அல்ல தம்பி" "விளைவினை மக்கள் எல்லாம் பொதுவாகக் துய்க்கும் மேன்மை முளைத்திடில் தமிழர் நாட்டில் முளைத்திடும் இன்ப வாழ்வு" இதுபோன்ற கருத்துகளும் இயற்கையின் படப்பிடிப்பும் என் பாடல்களில் ஆங்காங்கே நிறைந்திருப்பதைக் காணலாம். நான் பொருளுக்கோ புகழுக்கோ விரும்பிக் கவிதைகள் எழுதியதில்லை. அப்படியென்றால் நான் செல்வந்தன் என்பது பொருளல்ல. உணர்வு மேலிடும் போது என்னால் கவிதை எழுத முடிகிறது. துண்டுதலால் என் விருப்பத்திற்கு மாறாகக் கவிதைகள் எழுத நேர்ந்தால் விறுவிறுப்பாகவும்