பக்கம்:எழில் விருத்தம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் | | 7 ஓட்டமாகவும் கவிதைகள் அமைவதில்லை. அது என் இயற்கைப் பண்பு. உணர்வும் உறவும் வயல் வெளியைச் சுற்றுவதும் குழந்தைகளுடன் விளையாடுவதும் கவிதை இயற்றுவதும் படிப்பதும் எனக்கு இன்பம் ஊட்டுவன. எனது கவிதைகளில் பெரும் பாலானவை நள்ளிரவில் பிறந்தவையே. எனக்கு விருப்பமானவை தனித் தமிழும் கவிதையும். நான் விரும்பாதவை மரக்கறி உணவும் பொய் பேசுவதும், நான் என் அய்ம் பத்தெட்டாமாண்டைக் கடந்து அய்ம் பத்தொன்பதாம் ஆண்டில் நடையிட்டுக் கொண்டிருக்கின்றேன். எனக்கு மாதரி, அய்யை, எழிலி, முல்லை, இளவெயினி என்கின்ற அய்ந்து பெண் மக்களும் நக்கீரன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி என்கின்ற நான்கு ஆண் மக்களும் உள்ளனர். பெண் பிள்ளைகளில் முன் நால்வர் திருமணமானவர்கள். அவர்கள் வாயிலாக எனக்குப் பதினேழு பேரப் பிள்ளைகள் உள்ளனர். r - - கவிதைத் துறையில் என் மாணவர் என்று குறிப்பிடத் தக்கவர் வித்துவான் பா.முத்து. அவரால் இயற்றப் பெற்ற கவிதை நூல் இயற்கை இன்பம்' என்பதாகும். - . இன்றைய நிலை இன்றுள்ள என் தாய் நாட்டின் நிலையை நினைத்துப் பார்க்கின் என் நெஞ்சம் கொதிக்கின்றது. அடிமையாய் நாம் வாழ்ந்த காலத்தையும் இன்று நாமே நம்மை ஆளுகின்ற் காலத்தையும் சீர் தூக்கிப் பார்க்கின்