பக்கம்:எழில் விருத்தம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 - வாணிதாசன் ஏதோ ஓர் பயங்கர எதிர்காலத் தோற்றம் என் கண் முன் தோன்றுகிறது. நிரந்தரமற்ற அரசியல் போக்கும் பண்பும் நேர்மையுமற்ற அரசியல் தலைவர்கள் பெருக்கமுமே நாட்டில் எங்கும் காணப்படுகின்றன. விடுதலை பெற்று நாமே நம்மை இரு பத்தாறு ஆண்டுகளாக ஆண்டு வருகின்றோம். மற்ற நாடுகளைப் போன்று என்ன முன்னேற்றம் நாம் அடைந்துள்ளோம் என்கின்ற கேள்விக்குறியே தோன்றுகிறது. நம்முள் ஊறிப்போன சமுதாய ஊழல்கள்-சாதிமதப் பிணக்குகள், அறிவு விளக்கமின்மை, வறுமை முதலியன நம்மை விட்டு அகன்றதாகத் தெரியவில்லை. மாறாக அரசியல் காழ்ப்பு, லஞ்ச ஊழல், பதவிப்பித்து போன்ற நாட்டைச் சீரழிக்கும் கொடுஞ் செயல்களே இன்று தலைவிரித்தாடுகின்றன. விலைவாசி உயர்வுகள், உணவுத் தட்டுப்பாடு, வேலை யில்லாத் திண்டாட்டம் போன்ற கொடுமைகள் நாட்டில் மலிந்து விட்டன. விடுதலை பெற்றால் நாட்டில் பாலும் தேனும் வழிந்தோடும் என்று அன்று பறைசாற்றப்பட்டது. ஆனால் இன்று, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதியால் பெயரிடப்பட்ட ஏழைகளின் பஞ்சப்பாட்டும் பல்லிளிப்பும் கண்ணிருமே நாட்டில் மலிந்திருப்பதைக் கான லாம். - . நினைத்துப் பார்க்கின் இந்நிலை நாட்டில் நீடித்தால் எதிர்காலம் என்னாகும்? பயங்கர சூனியம் தோன்றுகிறது. நாட்டையும் மக்களையும் அரசியலையும் சீரும் சிறப்புமாக நடத்திச் செல்லும் விடிவெள்ளிகள் கட்டாயம் இனித்தோன்றியே ஆகவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். தோன்ற வாழ்த்துகின்றேன்.