பக்கம்:எழில் விருத்தம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் ! I () விழைவும் வேண்டுகோளும் அண்மையில் என் அய்ம்பத்தொன்பதாம் ஆண்டு தொடக்கக் கவிதை மலர் வெளியிடப்பட்டது. அதற்கென்று க.பொ.இளம் வழுதி என்னைப் பேட்டி கண்டார். என் விழைவு என்னவென்று கேட்டார்

  • { சென்றதுவே என்றும் திரும்iாது;

நன்றே இனிபுரிக, நற்றமிழைத் தாய்மொழியை ஊன்உடல்போல் ஒம்பி உலகமொழிக் கெல்லாம் தேன்வழங்கச் செய்க, திருநாட்டு மக்கள் பகுத்துண்டு வாழ்க, பகைநீக்கி வாழ்க; தொகுத்துரைக்கும் நூலின் துணைகொள்க; என்றென்னும் ஒன்றிரண்டு பெற்றே உயர்குடியின் நற்பெயரை என்றும் நிறுத்தல் இனிது: எனும் எனது விருப்பத்தை மக்கள் நிறைவேற்ற வேண்டுமென்பதே என் வேண்டுகோள். மக்கள் துணை புரிவார்களாக அதுவே எனக்கு என்றென்றும் நிலைத்து நிற்கும் பெருமகிழ்ச்சியாகும், எனக்கு ஒரு பேராசை உண்டு. அதாவது, “ஊருக்கே உழைப்பதுவும் ஊர்வாழும் மக்கள் உயர்வுக்கே உழைப்பதுவும் நற்கவிஞர் வாழ்க்கை; தேருக்கே அச்சாளி: திசைதிருப்ப முட்டு - தெருவெல்லாம் கொடுப்பதற்கு திரண்டதோள் வேண்டும் காருக்கே யார்சொள்ளார் கடல்நீரை மொண்டு கழனியெலாம் வளமாக்க; நாம்வாழும் நாட்டில் நேருக்கு நேர்நடக்கும் அறிவற்ற செய்கை நெறிப்படுத்த என்பாடல் வழிவகுத்தால் போதும்!