பக்கம்:எழில் விருத்தம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வாணிதாசன் அந்தியிலே கோயிலெலாம் மணியடிக்கக் கேட்பேன் ஆனாலும் எனதுள்ளம் அமைதிகொள்வ தில்லை சந்தியிலே கூடுகின்ற கூட்டம்போல் இன்றித் தமிழ்மக்கள் தாய்நாட்டின் நலம்பேண வேண்டும். பந்தியிலே தலைவாழை இலையிட்டே உண்போர் பசிமீறக் கையேந்திக் கெஞ்சுகின்ற ஏழை புந்தியிலே நிழலாடக் காண்கின்றேன். இந்தப் போக்கிற்கெலாம் என்பாடல் வழிவகுத்தால் போதும்! பாலுக்கே அழுங்குழவி பசிக்கேங்கு வோர்கள் பாயின்றி இடமின்றி நிழலுறங்கும் கூட்டம் நூலுக்கே வழியின்றிக் கைத்தறியால் வாழ்வோர் நுணலைக் கூச்சலிட்டால்பசிநீங்கப் போமோ? வேலுக்கே வேலெதிர்ப்பை விளைவிக்க வேண்டும் விரைவினிலே மக்கட்கு நல்லுழைப்பைத் தூண்ட தோலுக்கே உணர்வூட்டப் பகுத்தறிவை ஊட்ட தூயதமிழ் என்பாடல் வழிவகுத்தால் போதும்!" என்பதுதான். இறுதியாக நான் ஆள்வோரை வேண்டிக் கேட்டுக் கொள்வதொன்றுண்டு. அதாவது, "ஆள்கின்ற நாற்காலி பொதுமக்கள் சொத்தாம் ஆள்வோர்க்கே என்றென்றும் அதுவுரிமை ஆகா மூளுகின்ற எதிர்ப்பிற்கோ கூச்சலுக்கோ அஞ்சி முற்போக்குத் திட்டத்தைத் தள்ளிப்போ டாதீர்" என்பதேயாகும். என் கவிதையைப் பற்றித் தமிழறிஞர் நாவலர் சோம சுந்தர பாரதி, தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழ்த் தாத்தா பேராசிரியர் மயிலை சிவமுத்து, பாவேந்தர் பாரதிதாசன்,