பக்கம்:எழில் விருத்தம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் | 2 | முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி சுவநாதம், நாவலர், நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி போன்றோர் பாராட் டியுள்ளனர். என் பாடல்கள் ஆங்கிலத்தில், ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுப் பாராட்டப் பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு என்னும் ஆங்கில இதழிலும் மலேசிய ஏடுகளிலும் இலங்கை ஏடுகளிலும் என் கவிதையைப் பற்றி ஆய்வுரைகளும் பாராட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன. திரைப் படங்களில் பாடல்கள் எழுதக் கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை அஃது நிலையற்றதெனக் கருதி மறுத்த துண்டு. இலங்கை சிங்கப்பூர் தமிழன்பர்களின் அழைப்பினை ஏற்றுச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் என் குடும்பச் சூழல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டன. என்னைப்பற்றி இனி அதிகம் நான் சொல்ல விரும்பவில்லை. என் கவிதைச் சுவைஞர்களும் ஆய்வுரையாளர்களும் சொல்ல வேண்டியவை பல இருக்கலாம் என நான் நம்புகிறேன். அப்பொறுப்பினை அவர்களுக்கே விட்டுவிடுகிறேன். வணக்கம்.