பக்கம்:எழில் விருத்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 வாணிதாசன் * சுழல் விளக்கை விளக்குங் கவிஞர், கோட்டானைப் போல் உனக்கும் பகலில் கண் குருடோ? எனக் கேட்கின்றார். அது பகலில் ஒளி வீசாத் தன்மையைக் காட்ட, அடுத்து நம் கவிஞர் தமிழ் மன்னன் வேல் நுனியை, மறத் தோளைக், குறுநிலத்தைக் கூறா நிற்கும் ' கோட்டை"யை நம் கண்மு ன் கொண்டு வந்து நிறுத்துகின்றார். தனி மனிதன் நல்வாழ்வு சரியும் என்றே கோட்டை மதில் அறிவுறுத்தும்' செய்தியைக் கூறுங்கால், 'நினைவில்லாத் தாயகத்தின் நிலையெண்ணா மக்கட்கே நித்தம் நித்தம் மலைக் கோட்டைக் கற்சுவரே! கருத்தை ஊட்டே! என்று சுழறும் வகையில் தமிழனுக்குத் தன் வரலாற்று அறிவு வேண்டும் என்பதை இடித்துக் கூறும் செவியறிவுறுஉந் தன்மை நீடு நினையத்தக்க ஒன்றாகும். மாலை'யில் காணும் ஒவ்வொரு பாமலரும் தமிழ் மணம் வீசி அடுத்தடி வைக்க வொட்டாமல் தடுத்து நிறுத்துகின்றது. மாலையூட்டும் மிாலையாக அமைந்துள்ளது மாலை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. o, கூலியாட்களின் கொதி மனம் போல் ஒளி குன்றிய குளிர்மாலை என்பதில், தொழிலாளர் துயர் துடைக்கத் துடிக்கும் கவிஞரின் தொண்டுள்ளத்தைக். கணடிடலாம. - . .