பக்கம்:எழில் விருத்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வாணிதாசன் கிளிக்கு மாவின் இலையை ஒப்புமை கூறியுள்ள புதுமையைக் கண்டு இன்புறாமல் இருப்பதற்கில்லை! செவ்வந்திப்பூ, அந்தி விளக்கினைப் போல அலர்ந்தது எனக் காட்டுகின்றார். கொல்லன் உலைக்களத்தில் காணும் செந்தீப் போல இலவு பூத்தது என்கிறார். நொந்த உளத்தினை மாற்றும் நுழைபுலத்தோர் ஒக்கும் சோலை' எனச் சோலையைப் புலவர்க்கு ஒப்புமை கூறியுள்ள நயம் பாராட்டற்குரியதாகும். ' கடலோரக்' காட்சியைப் படம் பிடித்துக் காட்டும் புதுமைக் கவிஞர் வாணிதாசனார், இளங்கோவடிகளாரின் கானல் வரியை விஞ்சுகிறார். கடலோரத்தை நாட்டைக் காக்கும் வீரன் எனவும், நெய்தல் நிலத்தின் அரண் எனவும் குறிப்பிடுகின்றார். . . . - 'கூறு கூறாய், 'உப்பிட்டுலரும், 'திரை மேல் சென்றோன்’ என்று தொடங்கும் பாடல்களைப் படிக்குந்தோறும் படிக்குந்தோறும் ஒசைநயமும், பொருளழகும், சொல்லழகும் நனிசிறந்து விளங்கக் காணலாம். " ஆற்றில் பொதுப்பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் விளங்க வைத்தலான வேற்றுப் பொருள் வைப்பணியைக் கவிஞர், அழிந்தனை