பக்கம்:எழில் விருத்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-, - வாணிதாசன் என்றும் வாழ்வார் எழில் விருத்தக் கவிஞர்! உலக வாழ்வு உருண்டோடுகிறது. காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதுவரவுகள் பழமை மீது படிகின்றன. மறைவு நேர்கிறது. 1950 முதல் 1970 வரை வாணிதாசனார் மக்கள் நாவில் பயின்று, நெஞ்சங்களில் நிறைந்திருந்தார். புதிய இளைஞர்கள் பழையவர்களை நினைக்க நேரமின்றித் தங்கள் காலத்தவரையே காணலாயினர். - - பாவேந்தருக்கு அடுத்த நிலையில் புதுமைக் கவிஞர் எனப் பாராட்டப் பெற்ற கவிஞரேறு வாணிதாசனாரின் நூல்கள் புதுப் பிறப்பு காணாமையால் படிப்புலகம் மறக்க நேர்ந்தது. தொடர்ந்து நினைவூட்ட இக்காலத்தில் அரசியல் நிலையும் இலக்கிய ஆர்வமும் துணைபுரியவில்லை. எதற்கும் தூண்டுகோல் தேவை யன்றோ? கவிஞரின் குடும்பத்தாருக்கும் பொறுப்புண்டல்லவா? வாணிதாசனாரின் நூல்கள் வெளிவந்த காலத்தில் பழகி மகிழ்ந்த இன்ப உணர்வின் உந்துதலால் அவரது கவி நூல்களைப் பற்றிய திறனாய்வுகள், விளக்கக் கட்டுரைகள், வாழ்க்கைக் குறிப்புகள் எனும் வகையில் சில நூல்களை நான் வெளியிட்டேன். அத்தொடர்ச்சியில் இச்சிறு நூலையும் மறுபதிப்பாக வெளியிடு கிறேன். கடைசியில் 2 தலைப்புகள் இணைத்துள்ளேன். அவரே எழுதிய் நினைத்துப் பார்க்கின். எனும் வாழ்க்கைச் சுருக்கமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. உணர்வும் ஒத்துழைப்பும் முயற்சியும் உறுபயன் கூட்டும்ாக! இயற்கையின்பக் கவிஞர், கொள்கைப் பிடிப்பாளர், கவிஞரேறு வாணிதாசனார்க்கு ஆண்டுதோறும் விழா நடத்தி வருவதுடன் புதுவையில் அவருக்குச் சிலை எழுப்பும் நிலையறிந்து தமிழ்நெஞ்சங்கள் புதுவைஅரசுக்குப் புகழ்மாலை சூட்டி மகிழ்கின்றன. வாழ்க வாணிதாசர் புகழ் - என்றும் வாழ்வார் எழில் விருத்தக் கவிஞர்! - அன்பன் 22.7.2004 - வெள்ளையாம்பட்டு சுந்தரம்