பக்கம்:எழில் விருத்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 எழில் விருத்தம் சீருடன் நிமிர்ந்த செங்கல் திருமணி மாடத்(து) உச்சித் தாரணி தமிழர் நாட்டுத் - தனிமதில் இடையில் மின்னி ஊரினைக் காக்கும் வீரன் ஒப்பவே ஓசை காட்டும் நேரிய செயலைக் கண்டேன்; நிமிர்மணிக் கூண்டே! வாழி! . . . 1 காலையில் கிழக்கில் தோன்றிக் கடும்பகல் உச்சி மேவி மாலையில் மேற்கில் சாய்ந்து வைகலை வெய்யோன் காட்டும் மாலையின் அளவே யன்றி, மணிக்கூண்டே! உன்னைப் போலக் காலத்தை ஒவ்வோர் நாளும் . இராப்பகல் காட்டப் போமோ? 2