பக்கம்:எழில் விருத்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வாணிதாசன் வீட்டுத் தலைவனைப் போல வேலிநி ழல்மனை தோறும் கூட்டி ஒதுக்கிய குப்பைக் கூலம ணிகளைக் கூவிக் காட்டி மனைவியாம் பெட்டை காதலர் குஞ்சுகள் மக்கள் ஊட்டிக் குடித்தனம் செய்யும் - சேவலை ஒப்பவர் உண்டோ? 9 பெட்டை நடந்திடப் பிள்ளைக் கோழிகள் பின்புறம் ஓடும்; பெட்டைக் குறுதுணை யாகப் பின்புறம் குஞ்சுகள் காத்தே நெட்டை மறவனாம் சேவல் நின்றுநின் றேவழி பார்க்கும்; பட்டப் பகலிலும் சேவல் பெட்டையின் பக்கமே காவல்! 1 O “ஒன்று மூன்றுடன் ஆறு - மா; விளம் பிறவிடம் உறுமே என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.