பக்கம்:எழில் விருத்தம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் Sl கூறு கூறாய்த் தோணி மரமும் குடிசெய் பெரு வலையும் மாறு பட்ட நெய்தல் நிலத்து மக்கட் சிறுகுடியும் சீறும் அலையை வென்றிங் காண்ட தெற்கின் புகழ் பாடித் தாறு மாறாய்க் கிடக்கக் கிடக்கும் தமிழ்சேர் கடலோரம் ! 6 உப்பிட் டுலரும் வாடு நாற உலர்த்தும் வலைநாறக் குப்பைப் புன்னை வெண்பூ நாறக் குளிரும் கழிநாற ஒப்பில் நெய்தற் கன்னிப் பெண்கள் ஒளிசேர் விழிநாறச் சிப்பி நாறச் செழுமண் நாறும் -- சிற்றுர்க் கடலோரம் ! 7 திரைமேல் சென்றோன் மனைவி மைக் கண் திசையில் போராட மரத்தில் ஏறி நெய்தற் சிறுவர் மறிநீர் போராட உரத்த குரலில் நுளையர் வலைமீன் உந்திப் போராடக் குரைக்கும் அலைகள் கரையில் மோதும் குளிர்ந்த கடலோரம் ! 8