பக்கம்:எழில் விருத்தம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 3 எழில் விருத்தம் விண்ணிடை எழுந்த முகில்களின் பேய்ச்சல் விளைவினால் குறிஞ்சியில் பிறந்து கண்ணிடை யருவி மலையிடை மருவிக் கடந்தனை ; முல்லையில் ஓடிப் . பண்ணிடை கூட்டி மருதமாம் நாட்டில் பலகிளை ஓடைகள் சேர விண்ணிடை நீலம் மேவிய கடலுள் மேவினை வழியறிந்(து) ஆறே ! 1. வயலிடைப் புகுந்தாய்; மணிக்கதிர் விளைத்தாய்: வளைந்துசெல் கால்களால் ஆறே t அயலுள ஒடை தாமரை கொட்டி ஆம்பலின் இதழ்களை விரித்தாய்; கயலிடைச் செங்கண் கருவரால் வாளை கரைவளர் தென்னையில் பாயப் . பெயலிடைப் பட்ட வானெனத் தோன்றும் பெருங்குளம் நிறைத்துவிட் டாயே! 2