பக்கம்:எழில் விருத்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ş 4 வழியினில் கண்ட மண்வளம் யாவும் வணிகனைப் போலுடன் ஈட்டிக் கொழித்தனை மருதம்; விளைத்தனை; மீண்டும் கொள்முதல் செய்தவை யாதாம்? கழியினில் தேங்கி உப்புடன் கலந்தாய்; கடலிடை விரைந்துமே ஓடி அழிந்தனை ஆறே ! அலைகட லுலகில் அழிவது பிறப்பதின் வித்தாம் ! 3 மலைமகள் மார்பு மாலைபோல் பிறந்தாய் ; வளர்ந்தனை சாரலில் பெருகி , இலையடர் பாறை மயிலினம் ஆட இருங்குயில் தமிழிசை பாடத் தலைத்தலை யாக முல்லையிற் பூத்த தளிர்மலர் வண்டுயாழ் மீட்டக் கலைபயில் மன்ற முழவென, ஆறே ! களிப்பினை ஊட்டுகின் றாயே ! 4. உன்வழி மறிப்போர் கொடிற்றினை உடைக்கும் உயர்வலி உன்னிடம் வாய்த்தும் உன்வழி மறித்தே உன்வலி அடக்கி உயரணை கட்டிய போழ்தும் மின்னிடி தேக்கும் முகிலினம் நாண மிகு பொருள் வள்ளலைப் போலப் பொன்கொழி ஆறே ! மருதமும் பாலைப் பொட்டலும் சோலைசெய் தாயே ! 5