பக்கம்:எழில் விருத்தம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 57 செங்கதிரோன் மலையிடையில் செம்மை தேக்கும் , செடிகொடிகள் பொன்பூக்கும்; திரும்பும் புட்கள் ; மங்கிவரும் ஒளிக்கெதிரே மேற்கு வானில் மையிருட்டுக் கைந்நீட்டும்; வானம் பூத்துத் தொங்குகின்ற பீர்க்கம்பூப் போலக் கண் முன் தொடுவானில் கீழ்த்திசையில் ஒளியில் மங்கி அங்கொன்றும் இங்கொன்றும் முன்னர்த் தோன்றி அடுத்தநொடி வான்நிறையும் விண்மீன் கூட்டம்!1 தைத்திங்கள் குளம்பூத்த பூவோ விண்மீன் ? தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்னக் காசோ, மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர் மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ, தைத்திட்ட பட்டாடை முத்தோ, தீட்டித் தரப்பட்ட ஒளிக்கல்லோ, சரிகைச் சேலை உய்த்திட்ட பொடிப்பூவோ, தொலைவில் தோன்றும் ஊரிட்ட் மின்விளக்கோ விண்மீன் கூட்டம்?2