பக்கம்:எழில் விருத்தம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்மீன் நிலமுதிர்ந்த இலுப்பைமரத் தந்தப் பூவோ, நீர்குளித்த கடல்முத்தோ, பவளக் காடோ, நிலைகுலைந்த பொற்சிலையின் சிதறல் தானோ, நெல்முத்தோ, மகிழமரம் உதிர்த்த பூவோ, நிலவரசிப் பெரும்படையோ, நீல வான நெடுவயலில் தெளித்திட்ட துள்பிண் ணாக்கோ கலையாத ஓவியமாம் கண்முன் தோன்றிக் களிப்பூட்டும விண்மீன்கள்? விந்தை விந்தை 3 பெண்ணரசி நிலாப்பெண்ணாள் வெளியில் வந்தால் பேரரசர் பின்செல்லும் கூட்டம் போல விண்ணுலகில் ஒளிமங்கிக் கிடக்கும் விண்மீன் விடியளவும் ஒளிவீசிக் காலை மங்கும்! மண்ணரசர் முன்தோற்ற படையைப் போல வளர்பரிதி வரக்கண்டால் மறைந்து போகும்! கண்ணுக்குப் பேரழகே வகைவ கையாய்க் காட்சிதரும் விண்மீன்கள்! விந்தை! விந்தை 4 திங்கட்கும் பரிதிக்கும் ஏங்கு கின்ற திருமலர்கள், விண்மீன்கள் உங்கட் குண்டோ? எங்குள்ளி என்றும்மை மனிதர் கூட்டம் எண்ணாம லிருந்தவொரு கால முண்டாம் இங்கிருந்தே உம்மையெல்லாம் அடக்கி யாள ஏவுகணை கண்டுவிட்டார் அறிவின் மேலோர்: மங்குகதிர் மீனினங்கள் பகலொளித்தே வாழ்ந்தாலும் விடமாட்டார் அறிவே வெல்லும் 5