பக்கம்:எழில் விருத்தம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 59 விண்மீனில் ஒன்றிரண்டு தெற்கில் நிற்கும் விரிவானில் ஒன்றிரண்டு வடக்கே செல்லும்; வெண்ணிலவைப் பின்தொடரும் ஒன்று; நல்ல விளைவாக்கும் பெருமழையை உணர்த்தும் ஒன்று; மண்ணுள்ளோர்க்(கு) அதிகாலை வரவைச் சொல்ல வானடியில் முளைத்துவரும் ஒன்று; மற்றும் எண்ணுக்கே அடங்காமல் காலம் காட்ட இரவினிலே எழுகின்ற மீனும் உண்டே! 6 மக்களெல்லாம் குரங்கினத்தின் வகையே யென்று வரலாற்றார் உரைக்கின்றார்; மெய்யோ, பொய்யோ? மக்களிலே தீமைபல நாளும் செய்யும் மடச்சிறுவர்க்(கு) இங்குள்ளோர் வால்வால்' என்றும், எக்களிப்பில் குரங்கென்றும் சொல்லிச் சொல்லி இடித்துரைத்தல் கேட்டதுண்டு வானில் தோன்றும் சொக்கவெள்ளி மீனினங்கள்! உங்கட் குள்ளும் வால்முளைத்துத் தோன்றுமினம் உண்டு போலும் 7 கல்லெழுந்து மண்தோன்றி மக்கள் தோன்றிக் கடல்சூழ்ந்த உலகத்தில் வாழ்தல் கண்டோம்; அல்லெழுந்து வான்தோன்றி ஆட்சி செய்யும் அழகுமிகு விண்மீன்காள்! உங்கள் வாழ்வு பல்லுழிக் காலமென உரைக்கின் றார்கள்! பண்பட்ட பெரியோரும் இந்த நாட்டில் புல்முளைக்கப் போனார்கள்! ஆனால், நீங்கள் புதுப்பொலிவில் எப்படித்தான் வாழ்கின்றீரோ? 8