பக்கம்:எழில் விருத்தம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வாணிதாசன் மண்ணுலகம், விண்மீன்காள்! நீங்கள் இன்றேல் வாழாதாம் ஒரு நாளும்! உண்மை உண்மை! விண்ணுலகில் வாழ்கின்ற நீங்கள் என்று விரிவானில் பிறந்தீரோ? கண்டார் இல்லை! மண்ணுலகில் வாழ்வோர்க்கே வயது நூறாம்! வாழையடி வாழையென வந்த பேச்சு! கண்சிமிட்டும் மீனினங்காள்! உயிர்கள் சாகக் காண்கின்றீர்! நூம்கடைநாள் யாரே காண்பார்? 9 வளிக்குயிராம் ; வான்தோன்றி வெறிகொண் டோடும் மழைக்குயிராம்; மழைவிளைக்கும் நன்செய் புன்செய் வெளிக்குயிராம்; வெளியினிலே என்றோ தோன்றி வீசுகின்ற புயற்காற்றுக் குயிராம்! வெய்யோன் ஒளிக்குயிராம்; ஒளிமாற்றி உலகுக் கீயும் -உயர்வானுக் குயிராகும்: காண்போர்க் கென்றும் துளித்துளியாய் வான்நிறைந்தே உலகைக் காக்கத் தோன்றுகின்ற விண்மீன்காள் வாழ்க வாழ்க! 1 O Jo 幻处 aଝ: “காயிரண்டு மாவொன்று தேமாவொன்று 'கலந்தவடி இரட்டும்.அதன் விகற்பங் காணே! என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். காய்ச்சீர் இரண்டும் மாச்சீர் ஒன்றும் தேமாச்சீர் ஒன்றும் புணர்ந்திரட்டியதை 岛作邵可岳。” -